• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

  • Share on

விளாத்திகுளத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விளாத்திகுளம் வட்டாரத் தலைவர் லூர்து பாக்கிய ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார துணை தலைவர் சொர்ணராஜ், வட்டாரத் துணைச்செயலாளர் முத்துமணி பாரத்,  ஆகியோர் முன்னிலைகல்வி மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ராஜன் வகித்தனர்.

விளாத்திகுளம் வட்டாரச் செயலாளர் இப்ராஹிம் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையை விளக்கம் குறித்து விளக்க உரை ஆற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் மயில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

  • Share on

கஞ்சா விற்பனை வழக்கு - இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

தூத்துக்குடியில் மாவட்டத்தில் முககவசம் அணியாத 433 பேருக்கு ரூ. 86,600 அபராதம் விதிப்பு!

  • Share on