• vilasalnews@gmail.com

கஞ்சா விற்பனை வழக்கு - இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

  • Share on

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 23.12.2021 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் காளியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் வசவப்பபுரம் கீழபுத்தநேரி, சுடலைமுத்து மகன் அரவிந்த் (22) என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேற்படி வழக்கின் நபரான அரவிந்த் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  வசவப்பபுரம் கீழபுத்தநேரி, சுடலைமுத்து மகன் அரவிந்த் (22) என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் நபரான அரவிந்த் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

  • Share on

தூத்துக்குடி கடற்கரை சாலையில் அதிக பனிப்பொழிவு - வாகனங்கள சாலைகளில் சிரமப்பட்டு சென்றன!

விளாத்திகுளம் : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

  • Share on