தூத்துக்குடி கடற்கரை சாலையில் இன்று ( 22.01.2022) காலை கடும் பனிப்பொழிவு நீடித்ததால் வாகனங்கள சாலைகளில் சிரமப்பட்டு சென்றன.
தமிழகத்தில் மார்கழி, தை, மாசி ஆகிய 3 மாதங்கள் பனிக்காலங்களாகும். இதில் மாசி மாதம் தான் காலையில் அதிக பனிமூட்டம் இருக்கும். ஆனால் தை மாதத்திலேயே அதிகளவு பனிமூட்டம் இருந்து வருகிறது. புகைமண்டலம் போல் காட்சித்தந்த பனிப்பொழிவால் வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் முகப்பு விளக்குடன் ஊர்ந்து சென்றன. தூத்துக்குடி கடற்கரை சாலையில் கானப்பட்ட இந்த பனியால் அப்பகுதி பனிப்பிரதேசம் போல கானப்பட்டது.