• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது, புகையிலை விற்பனை : 14 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ( 20.1.2021)  சட்டவிரோதமாக  புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் உத்தரவின்பேரில் அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று (20.01.2022) மேற்கொண்ட ரோந்துப் பணியில் சட்டவிரோதமாக  புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சட்டவிரோதமாக  மதுபாட்டில்கள் விற்பனை செய்த 11 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 18 புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் 63 மதுபாட்டில்கள்   பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ஹிந்தி இடம் பெற்றது எப்படி ? - முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கேள்வி!

கோவிலில் பெண்கள் குளியலறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுப்பு - பெண் பக்தர்கள் அதிர்ச்சி!

  • Share on