• vilasalnews@gmail.com

திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ஹிந்தி இடம் பெற்றது எப்படி ? - முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கேள்வி!

  • Share on

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லும் திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ஹிந்தி இடம் பெற்றது எப்படி, மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு திமுக அரசு இருப்பதாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள எட்டயபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், நகர செயலாளர் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் : 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தேர்தலில் திமுகவினர் தாக்கல் செய்த வேட்புமனுக்களை முதல்வர் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால் பலர் 90 சதவீதம் பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம். திமுகவினரிடம் சொத்து மதிப்பில் கால்வாசி கூட அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் இல்லை என்றும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் எதிர்கட்சியாக இருந்த போது பல்வேறு வன்முறைகள், அடங்குமுறைகளை சந்தித்து வளர்ந்த கட்சி அதிமுக. எனவே அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. 

பொங்கல் பரிசு  தொகுப்பில் பல பொருள்கள் காணமால் போனது மட்டுமின்றி, தரமில்லாத பொருள்களை வழங்கியுள்ளனர். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்றும், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லும் திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ஹிந்தி இடம் பெற்றது எப்படி , அத்துணையும் வெளிமாநிலங்களில் வாங்கியுள்ளனர்.தமிழகத்தில் வெல்லம் வாங்கி இருந்தால் இங்குள்ள உற்பத்தியாளர்கள் பயன்பெற்று இருப்பார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும், அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்த போது, அவர் மீது வழங்கப்போட்டது திமுக தான், அவரும் உப்பை தின்னு தண்ணீர் குடித்தவர் தான், அந்த வழக்கினை முடிக்க அவர் பட்டபாடு அவருக்கு தெரியும் என்றார்.

  • Share on

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிய சாதனை!

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது, புகையிலை விற்பனை : 14 பேர் கைது!

  • Share on