• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து : 44 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து  மேற்கொண்டதில் நேற்று  44 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் உத்தரவின்பேரில் அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று (17.01.2022) மேற்கொண்ட ரோந்துப் பணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருட்கள்  மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 5 வழக்குகளும் ஆக மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்து 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சட்டவிரோதமாக  மதுபாட்டில்கள் விற்பனை செய்த 30 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 பேரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து  1 கிலோ 250 கிராம் கஞ்சா, 34 புகையிலைப் பாக்கெட்டுகள், 228 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 3,800/- பணம்  பறிமுதல்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

எப்போதும் வென்றான் : ஆட்டோ கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

தூத்துக்குடி பெண் குறுஞ்செய்தி மூலம் ஆன்லைனில் இழந்த ரூ1 லட்சம் மீட்பு!

  • Share on