செய்துங்கநல்லூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமை காவலர் குணசேகரன், முதல் நிலை காவலர்கள் வேம்பு ராஜ், கைலேயங்கிரிவாசன், ஆனந்தராஜ், முத்துக்குமார், நாராயணசாமி, காவலர்கள் ஜான் அந்தோணி ராஜ் மற்றும் பட்டவராயன் நேற்று (17.01.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்துங்கநல்லூர் சுடுகாட்டுப் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த செய்துங்கநல்லூர்,வி.கோவில்பத்து மந்திரம் மகன் சுந்தரம் (எ) கோட்டை (22)
கொங்கராயகுறிச்சி பழனி மகன் வேல்பாண்டி (20), மற்றும் செய்துங்கநல்லூர் அய்யமார் தெரு, கொம்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக மேற்படி போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் TN 50 AC 7113 (TVS Apache) என்ற எண் கொண்ட இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மேற்படி நபர் சுந்தரம் (எ) கோட்டை என்பவர் மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கு உட்பட 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.