• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்த விழா கொண்டாட்டம் : ஒன்றியச் செயலாளர் காந்தி காமாட்சி தலைமையில் நடைபெற்றது!

  • Share on

எம்ஜிஆரின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் அதிமுக செயலாளருமான காந்தி காமாட்சி தலைமையில் குறுக்குச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

அதிமுக நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி கொண்டாடினர்.

இந்நிலையில், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் குறுக்குச்சாலையில் எம்ஜிஆரின் 105 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

இதில், முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றியச்செயலாளருமான காந்தி காமாட்சி தலைமையில் குறுக்குச்சாலையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

விளாத்திகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் : முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் கொண்டாட்டம்!

திருச்செந்தூரில் இன்று தைப்பூசத் திருவிழா - பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

  • Share on