• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் : முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் கொண்டாட்டம்!

  • Share on

விளாத்திகுளத்தில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளருமான சின்னப்பன் தலைமையில்,  விளாத்திகுளம் பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அதே போல் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட  விருசம்பட்டி, புதூர், பட்டித்தேவன்பட்டி,கம்பத்துபட்டி நாகலாபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளருமான சின்னப்பன் அதிமுக கட்சி கொடியை ஏற்றி, எம்ஜிஆர் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி,  பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே.பெருமாள்,  விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் முனியசக்தி ரவிச்சந்திரன், புதூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுசிலா தனஞ்செயன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், நடராஜன், மாவட்ட பிரதிநிதியும், வைப்பார் கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான செண்பகப்பெருமாள், நகரச் செயலாளர் மாரிமுத்து, கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

எட்டையபுரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா : சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்த விழா கொண்டாட்டம் : ஒன்றியச் செயலாளர் காந்தி காமாட்சி தலைமையில் நடைபெற்றது!

  • Share on