• vilasalnews@gmail.com

எட்டையபுரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா : சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

  • Share on

எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு, எட்டையபுரம் நகர அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரம் பேரூராட்சி பகுதியில், அதிமுக நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, அதிமுக இலக்கிய அணி இணை செயலாளரும் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனையடுத்து, பொதுமக்களுக்கும் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மங்களகிரி செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டடம்

விளாத்திகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் : முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் கொண்டாட்டம்!

  • Share on