• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - காயம்பட்டவர் மீட்பு - எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வை!

  • Share on

தூத்துக்குடி சண்முகபுரம் பெருமாள் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் காயம்பட்டவர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  சண்முகபுரம், பெருமாள் தெருவில் உள்ள ஒரு வீட்டில்ஆல்பட்ட என்பவரது மனைவி  அமலபுஷ்பம் (51) என்பவர் கடந்த 15 வருடங்களாக தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் அமலபுஷ்பத்தின் சகோதரரான விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரது மகன் அருள்மணி (50) என்பவர் அமல்புஷ்பத்தை பார்ப்பதற்காக நேற்று (14.02.2022) வந்துள்ளார். இந்நிலையில் இன்று (15.01.2022) காலை அருள்மணி மற்றும் அமலபுஷ்பம் ஆகியோர் வீட்டில் இருந்தபோது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அருள்மணியை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விபத்தில் காயமடைந்த அருள்மணியின் சகோதரியான அமலபுஷ்பம் என்பவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் காயம்பட்டவரை விரைந்து சென்று மீட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடி : ஆன்மிக இயக்கம் சார்பில் 36ம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி - 1,200 பேருக்கு உதவி!

மங்களகிரி செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டடம்

  • Share on