• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : ஆன்மிக இயக்கம் சார்பில் 36ம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி - 1,200 பேருக்கு உதவி!

  • Share on

தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் 36ம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி நடைபெற்றது.

தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் 36-ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணிப் பணி ஆன்மிக இயக்கம் சார்பில் நடைபெற்றது. தூத்துக்குடி 3ம் மைல் திருவிக நகர் சக்தி பீடத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 1008 குங்கும அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையை சக்திபீட பொருளாளர் அனிதா தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கால்டுவெல் காலனி நேசக்கரங்கள் இல்லம், எம்பவர் பெண்கள் காப்பகம், நியு நேசக்கரங்கள் முதியோர் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா ஊனமுற்றோர் பள்ளி, லூசியா பார்வையற்றோர் குடியிருப்பு, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகர் அன்னை கருணை இல்லம், கதிர்வேல் நகர் ஆன்மாவின் உள்ளங்கள், பாசக்கரங்கள் முதியோர் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழ அழகாபுரி பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மெர்சி பார்வையற்றோர் இல்லம், நரிக்குறவர் குடியிருப்புகள் மற்றும் தெருவோர ஏழை மக்கள் உள்ளிட்ட 1,200 பேருக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு மற்றும் புத்தாடைகள், வேஷ்டி சேலைகள், போர்வைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன், பொருளாளர் கண்ணன், இளைஞர் அணி தலைவர் செல்லத்துரை, திருவிக நகர் சக்தி பீட துணைத்தலைவர் திருஞானம், சிதம்பரநகர் மன்ற தலைவர் மணி, சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், ஆன்மிக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் தனபால், பாக்கியம், பாண்டி, தாமஸ்ராஜன், சக்திராம், மணிகன்டன், அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பொங்கல் பண்டிகை பாதுகாப்பு : ஒரே நாளில் 112 பேர் கைது : எஸ்பி., ஜெயக்குமார் நடவடிக்கை!

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - காயம்பட்டவர் மீட்பு - எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வை!

  • Share on