• vilasalnews@gmail.com

ஸ்ரீவைகுண்டம் : ஆட்டோ டிரைவரை வழிமறித்து மண்வெட்டி கணையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  • Share on

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ டிரைவரை வழிமறித்து மண்வெட்டி கணையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

செம்பூர் நடுத்தெரு  கனகராஜ் என்பவரது மகன் வைத்திலிங்கம் (28). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று (13.01.2022) இரவு சவாரியாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவராமமங்கலம் பகுதிக்குச் சென்று அங்கு ஆட்டோ பயணியை இறக்கி விட்ட போது அங்கு மதுபோதையில் வந்த சிவராமமங்கலம் துரைராஜ் என்பவரது மகன் பூல்பாண்டி (47) என்பவர் வைத்திலிங்கத்தை வழிமறித்து தவறாகபேசி கல் மற்றும் மண்வெட்டி கணையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வைத்திலிங்கம் இன்று (14.01.2022) அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து பூல்பாண்டியை கைது செய்தார்.

  • Share on

தூத்துக்குடி அமமுக நிர்வாகி அதிமுகவில் இணைக்கிறார்?

பொங்கல் பண்டிகை பாதுகாப்பு : ஒரே நாளில் 112 பேர் கைது : எஸ்பி., ஜெயக்குமார் நடவடிக்கை!

  • Share on