• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அமமுக நிர்வாகி அதிமுகவில் இணைக்கிறார்?

  • Share on

தூத்துக்குடியை சேர்ந்த அமமுக நிர்வாகி ஹென்றி தாமஸ் அதிமுக வில் இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியின் முன்னாள் நகர் மன்ற தலைவரான ஹென்றி தாமஸ், டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி அமமுகவில் ஹென்றி தாமசுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், அதிர்ப்தியில் இருந்து வந்த ஹென்றி தாமஸ், அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனையும், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ., வையும் சந்திந்துள்ளதாகவும், மீண்டும் அவர் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை சென்னையில் நேரில் சந்தித்து அவர்கள் முன்னிலையில் அதிகார பூர்வமாக ஹென்றி தாமஸ் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • Share on

தமிழ் பெருங்குடி மக்களின் பேராதரவுடன் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும்மகிழ்ச்சி!

ஸ்ரீவைகுண்டம் : ஆட்டோ டிரைவரை வழிமறித்து மண்வெட்டி கணையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  • Share on