• vilasalnews@gmail.com

புரெவி புயல் முன்னெச்சரிக்கை - தமிழகத்தில் 6 மாவட்டங்களில் டிசம்பர் 4 பொது விடுமுறை!

  • Share on

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் டிசம்பர் 4 பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் புரெவி புயல் பாம்பன் - குமரி இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை (04-12-2020) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  • Share on

ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை

"கருப்பர் கூட்ட முட்டாள் கூட்டமே"சீரிய ம.பி முதல்வர்

  • Share on