தூத்துக்குடி 30வது வார்டு பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட டூவிபுரம், அண்ணாநகர், ஹவுசிங்போர்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பகுதிசெயலாளர் ரவீந்திரன் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் எவர்சில்வர் பாத்திரத்தை வழங்கி துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் அந்தோணிராஜ், செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் கிளிப்ராஜன், குமார், நிர்வாகிகள் பாக்கியமணி, மார்க்கிஸ்ட் ராபர்ட், திணேஷ், கோகுல்நாத், வெங்கடேஷ், முனியராஜ், சதீஷ், ஆனந்த், அருண்மணி, மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர் அருண்சுந்தர், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.