தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில், தமிழ்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகம் முன்பு பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளான, பொங்கல் திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தின் முன்பு, பத்திரிக்கையாளர்கள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முக சுந்தரம், செயலாளர் இசக்கி ராஜா, பொருளாளர் செந்தில் முருகன், இணைச் செயலாளர் சிதம்பரம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும், விழாவில் மன்ற கௌரவ ஆலோசகர்கள் அருண், செயற்குழு உறுப்பினர்கள் ஆத்திமுத்து, காதர், முரளிகணேஷ், முத்துராமன், இருதயராஜ், ராஜு, உறுப்பினர்கள் மாரிராஜா, மாணிக்கம், ஜெயராம், கருப்பசாமி, சாதிக்கான், பேச்சிமுத்து, ராஜன், பாலா, செய்யது அலி சித்திக், மணிகண்டன், வள்ளிராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.