32 வருடங்களாக பழனிக்கு பாத யாத்திரை: இவ்வருடம் வெள்ளி வேல் காணிக்கை செலுத்தும் முருகனின் தீவிர பக்தர்
ஆறுபடை வீடுகளில் ஓன்றான பிரசித்திபெற்ற பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் மாலை அணிந்து விரதம் இருந்து தைப்பூச திருவிழாவையொட்டி தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது தமிழக அரசு கொரோனா விதிமுறைகளை விதித்துள்ளது. அதை முறையாக கடைபிடித்து பக்தர்கள் கொரோனா விதிமுறைகளின் படி பாதயாத்திரையாக செல்கின்றனர்.
தூத்துக்குடி தங்கம்மமாள்புரத்தை சேர்ந்த கனிராஜ் என்பவர் தீவிர முருகபக்தராவர் இவர் தனது இல்லத்தில் முருகன் கோவில் ஒன்றை கட்டி தினசரி வழிபட்டு வருகிறார்.
ஆண்டு தோறும் விரதம் இருந்து மாலை அணிந்து பழனிக்கு நடைபயணமாக செல்வது வழக்கம்
அதேபோல் இந்த ஆண்டு 33வருடமாக செல்லும் அவர் வெள்ளி வேல் காணிக்கையாக செலுத்துவதற்கு சிறப்பு பூஜை செய்து வெள்ளி வேலுடன் நடைபயணமாக இங்கிருந்து ராஜபாளையம் சென்று அங்கு 130 பேர் கொண்ட குழுவுடன் பாதையாத்திரையாக சென்று பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வெள்ளிவேலை கோவிலில் காணிக்கையாக செலுத்தி விரதத்தை முடித்துக்கொள்கின்றனர்.
இந்த குழுவின் சார்பில் பல இடங்களில் அன்னதானமும் வழங்குகின்றனர்.