• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள் - அலைமோதும் கூட்டம் - போக்குவரத்து நெருக்கடி!

  • Share on

தூத்துக்குடி யில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு பொருட்கள் வாங்க காய்கனிமார்கெட் பகுதியில் பொதுமக்கள் குவிந்து வருவதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான காய்கறி, கரும்பு, அடுப்பு, பனை ஓலை, வண்ணக்கோலப்பொடி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க தூத்துக்குடி பாளை ரோடு, தமிழ் சாலை சந்திப்பு, ஜெயராஜ் சாலை, தற்காலிக பேருந்து நிலையம் முன்பு, காய்கனி மார்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் மூன்று தினங்களுக்கு முன்பாகவே அலைமோத தொடங்கிவிட்டது.

மேலும், தற்காலிக பேருந்து நிலையம் சென்று வரும் பேருந்துக்கள், மார்கெட் பகுதிகளுக்கு பொருட்களை ஏற்ற இறக்க வரும் நான்கு சக்கர வாகனங்கள், பொதுமக்கள் வரக்கூடிய ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் ஒழுங்கு முறையற்று நிறுத்துதல் உள்ளிட்டவைகளால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன. எனவே அப்பகுதியில் கூடுதல் காவல்களை நியமித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே வேளையில் கொரோனா ஒமிக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வரும் சூழலில் பண்டிகை காலத்தில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பட்சத்தில் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், மாவட்ட மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடையே முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட் நோய் தொற்று தடுப்பு  கண்காணிப்பில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதார ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

  • Share on

விளாத்திகுளத்தில் வீடுபுகுந்து திருடிய பக்கத்து வீட்டு வாலிபர் கைது - ரூ.3லட்சம் நகைகள் மீட்பு!

ஆகம விதிகளின் படி பொங்கல் அன்று கோவில்கள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்- சற்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!

  • Share on