குற்றப் புலனாய்வு வழக்குகளில் சிறப்பாக பணி புரிந்து விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.
குற்றம் மற்றும் குற்றவாளிகளின் தகவல் குறித்து தென்னிந்திய அளவில் தகவல் தெரிவிப்பது தொடர்பாக குற்றப் புலனாய்வுக்கென (Crime Intelligence) ஒருங்கிணைந்த வாட்ஸ்அப் குழு உள்ளது. இந்த குழுவில் குற்றாவளிகளின் தகவல், இருப்பிடம் போன்றவற்றை பற்றிய தகவல் நுண்ணறிவில் மாநில அளவில் அனைத்து மாவட்டத்திலும் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அதன்படி குற்றப் புலனாய்வு குழுவில் சிறப்பான முறையில் பணிபுரிந்ததற்காக தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டு சென்னை தலைமையிட உதவி காவல்துறை தலைவர் சரவணன், அவருக்கு கேடயம் வழங்கினார்.
மேலும் தலைமைக் காவலரின் சிறப்பான பணியினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து தலைமைக் காவலர் மணிகண்டனுக்கு பாராட்டு தெரிவித்து, மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தினார்