• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து : ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, பொதுமக்கள் கூடும் இடங்களில் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் புகார் மனுக்களை அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் போட்டுவிட்டு செல்லலாம் அல்லது அஞ்சல், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம் அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவும், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.1¾ லட்சம் அபராதம் வசூல் : ஊரடங்கை மீறிய 48 பேர் மீது வழக்குப் பதிவு!

மாணவர்கள் அப்துல்கலாம், காமராஜரை பின்பற்ற வேண்டும்- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேச்சு

  • Share on