தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய 48 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத 876 பேருக்கு அபராதம் ரூ.1.75லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனோ மற்றும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (07.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 48 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 143 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 126 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 169 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 86 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 62 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 184 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 48 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 58 பேர் மீதும் என மொத்தம் 876 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,75,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 3 பேர் மீதும் என சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மொத்தம் 9 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 4500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு மொத்தம் ரூபாய். 1,79,700/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.