• vilasalnews@gmail.com

விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக ஆர்ப்பாட்டம் : கீதா ஜீவன் எம்எல்ஏ அறிவிப்பு

  • Share on

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் வருகிற 5 ம் தேதி மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 3-புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டத்தால் விவசாயிகள், நுகவோர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். இதை அறிந்து நாடாளுமன்றத்தில் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் அ.தி.மு.க-வைத்தவிர தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து போராடியது.

பா.ஜ.க அரசு தன்னுடைய பெரும்பான்மை பலத்தால் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டது.

இச்சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் உச்சகட்டமாக தற்போது தலைநகா் டெல்லியில் 1 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் தி.மு.க சார்பில் மாவட்ட தலைநகரங்களில் 05.12.2020 அன்று கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்திட வேண்டும் என்ற கழகத் தலைவா் மாண்புமிகு தளபதியாரின் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் 05.12.2020 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி பாளைரோடு-சிதம்பரநகா், பேரூந்து நிறுத்தம் எதிரில் மாவட்ட பொறுப்பாளராகிய என்னுடைய (P.கீதாஜீவன்) தலைமையில் மாபெரும் ஆா்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினா்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் மற்றும் ஊராட்சி கழக செயலாளா்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆா்ப்பாட்டம் வெற்றியடையச் செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • Share on

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - ஆட்சியர் வேண்டுகோள்

ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை

  • Share on