தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான பணிகளை கனிமொழி எம்பி., ஜனவரி 8ம் தேதியான இன்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான பணிகள் மற்றும் வார்டுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது,அமைச்சர் கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமணை முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.