ஜனவரி 7 ம் தேதி ஒரே நாளில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 ஆயிரத்து 225 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் நேற்று ( ஐன.,7 ) 14 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுரை மொத்தம் 56 ஆயிரத்து 211 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது வரையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 412 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர். நேற்றைய தேதியில் இறப்பு ஏதும் இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.