கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கம்ப்யூட்டர் பிரிவு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, யூனியன் தலைவர் மற்றும் 45 அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்ட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வந்தது. இதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும், அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி இன்று டாக்டர் மனோஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் யூனியன் அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 46 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஆணையாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், அலுவலகர், ஊழியர்கள் என 46 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களின். சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.