புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பவர் பிளான்ட்டில் காப்பர் வயரை திருட முயற்சித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி, கீழவேலாயுதபுரம் பிரியான் என்பவரது மகன் ஆண்டிராஜ் (37), என்பவர் நேற்று (06.01.2022) புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவேலாயுதபுரம் பகுதியில் உள்ள பவர் பிளான்ட் பகுதிக்குள் நுழைந்து காப்பர் வயரை திருட முயற்சித்துள்ளார். அப்போது அந்நிறுவனத்தின் பணியில் இருந்த செக்யூரிட்டி அலுவலர் கலியபிள்ளை என்பவர் ஆண்டிராஜை பிடிக்க முற்பட்டபோது ஆண்டிராஜ் கலியபிள்ளையை அவதூறாக பேசி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேற்படி நிறுவனத்தின் பொறியாளர் சாந்தகுமார் (29) என்பவர் இன்று (07.01.2022) அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன் வழக்கு பதிவு செய்து ஆண்டிராஜை கைது செய்தார்.