தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூரில் நடைபெற்ற இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்கவிழா வெம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமையிலும், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் பொன்ராஜ் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்வில், கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் முதல் நாள் மைய தொடக்க வகுப்புகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தொடக்க வகுப்பில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த மைய தொடக்க விழாவில் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் லட்சுமணன், கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.