• vilasalnews@gmail.com

எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் முன்பு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on

எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் செயல்பட்டு வரும் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதி மில் ஏஐடியுசி தலைவர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளான,

1. தமிழகத்தில் இயங்கி வரும் ஆறு கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்த காலம் நிறைவு பெற்று ஓராண்டு காலம் ஆகியும் சம்பளப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை இதனால் கைத்தறித்துறை சம்பளப் பேச்சுவார்த்தை துரிதப்படுத்தி உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

2. தகுதி வாய்ந்த NMR தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

3. NMR தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

4. ஸ்பின்னிங் பிரிவில் இயந்திரங்களை முறையாக பராமரிக்காமல் சைடுகளை கூட்டக் கூடாது.

5. ஆலையில் உள்ள கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.

6. கேண்டீனில் தரமான உணவு வழங்க வேண்டும்.

7. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓராண்டாகியும் பணிக்கொடை வழங்காததை உடனடியாக வழங்க வேண்டும்.

8. இனிவரும் காலங்களில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் பணிக்கொடை வழங்க வேண்டும்.

9. தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் ஆண்டுதோறும் சிறந்த தொழிலாளர்களை தேர்வு செய்து பரிசு பொருட்களை வழங்க வேண்டும்.

10. ஆலையில் உள்ள இயந்திரங்கள் அனைத்தையும் இயக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. எட்டையபுரத்தில் ஏஐடியுசி சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாரதி மில் செயலாளர் பாலகிருஷ்ணன், ஏஜடியுசி மாவட்டத் தலைவர் தமிழரசன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், சேது, சந்திரசேகர் மற்றும் ஏராளமான நூற்பாலை தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

  • Share on

விளாத்திகுளத்தில் மாற்றுத் திறனாளிக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்!

வெம்பூரில் இல்லம் தேடி கல்வி தொடக்கவிழா : ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது!

  • Share on