• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் மாற்றுத் திறனாளிக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில், இன்று மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் கண் மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர் உள்ளிட்டோரைக் கொண்ட புதிதாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கோரும் விண்ணப்பதாரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உடனடியாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின் மருத்துவர்களின் பரிந்துரையின்படி, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளிக்கு அரசு சார்பில் இலவசமாக உதவி உபகரணங்களான செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளாக, ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை(UDID), உதவி தொகை, மாற்றுத்திறனாளி உதவி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்குமாறு கோரிக்கை மனுவினை தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரனிடம் அளித்தனர்.

விளாத்திகுளத்தில் இன்று நடைபெற்ற இந்த சிறப்பு மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாமில், விளாத்திகுளம் வட்டாட்சியர் விமலா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக உதவி செய்து அவர்களின் தேவையை நிவர்த்தி செய்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடிஐ நேரடி சேர்க்கை : ஜனவரி 15 வரை கால நீட்டிப்பு!

எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் முன்பு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on