• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடிஐ நேரடி சேர்க்கை : ஜனவரி 15 வரை கால நீட்டிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர் /முதல்வர் எஸ்.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம்) ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 15.01.2022 வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர் 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ், 5 பாஸ்போட் சைஸ் போட்டா, ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள் கொண்டு வந்து தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ/மாணவிகளுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.750 உதவித் தொகை (வருகை நாட்களுக்கு ஏற்ப),  கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், சீருடை – ஒருசெட், விலையில்லா காலணி,  பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்/முதல்வரை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share on

தூத்துக்குடியில் கொரோனா விதிமீறல் : போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு!

விளாத்திகுளத்தில் மாற்றுத் திறனாளிக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்!

  • Share on