தூத்துக்குடி சிவன் கோவிலில் பாரத பிரதமர் நீண்ட ஆயுளுடன் வாழ பாஜக மகளிர் அணியினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பஞ்சாப் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குளறுபடியால் திரும்பிய விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால் அவர் நலமுடன் இருக்க வேண்டி பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் மகா மிருத்யுஞ்சய் ஜெபம் சென்னை கபாலீஸ்வரர் திரு கோவிலில் வைத்து நடத்தினார்கள்.
அதனை தொடர்ந்து நேற்று ( ஜனவரி 6 ) மாலை தமிழகம் முழுவதும் பாரத பிரதமர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டி சிறப்பு பூஜைகள் பாஜக மகளிர் அணி சார்பாக செய்யபட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திரு கோவில் மற்றும் தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் திருகோவிலிலும் மகளிர் அணி தலைவி தேன்மொழி தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.