• vilasalnews@gmail.com

தமிழக அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது..

  • Share on

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் கின்ஸ் அகாடமி சார்பில் தமிழக அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் அகாடமியின் பயிலரங்கம் திறப்பு விழா போல் பேட்டையில் உள்ள கிங்ஸ் அகாடமியில் நடைபெற்றது..

இவ்விழாவிற்கு தொழிலதிபர் மோகன் தலைமை வகித்தார். கின்ஸ் அகாடமி தலைவர் பேச்சிமுத்து வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அகாடமியின் பயிலரங்கத்தை திறந்து வைத்து நினைவு பரிசு வழங்கினார்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில், மாணவ, மணவிகளுக்கு இது போன்ற பயனுள்ள பயிற்சி தன் சமுதாயம் மட்டுமின்றி பிற சமுதாய மக்களுக்கும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பணி செய்வதை மனதார பாராட்டினார்.

இலவசமாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதென்பது சாதாரனமான விஷயம் அல்ல. கல்வியை சிலர் 5பைசா முதலீடு செய்து அதில் 10பைசா லாபம் எடுக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள் ஆனால் இங்கு சமூகசேவை செய்வது அதிசயம் தான். 

பல்வேறு துறைக்கு தேர்வு எழுதியுள்ளவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த வெற்றியின் மூலம் தங்களது தாய் தந்தையர்களின் எண்ணங்களை உணர்ந்து மாணவர்கள் அதை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். 

குறிப்பாக, கிராமத்தை சேர்ந்தவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு நாம் செல்ல முடியுமா என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு இந்த இலவச கல்வியின் மூலம் தனது படிப்பறிவையும், பொது அறிவையும், திறமையையும் வளர்த்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான படிப்புகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் இருந்த கல்வி வேறு தற்போது உள்ள கால சூழ்நிலைக்கு ஏற்ப உள்ள படிப்பு வேறு இதையொல்லாம் உணர்ந்து தாங்கள் எழுதும் தேர்வுகளில் 80 சதவீதம் இவர்களின் பங்களிப்பு உள்ள நிலையில் 20 சதவீதம் உங்களது அறிவு திறனும் அமைய வேண்டும்.

அரசு துறைகளில்  அதிகாரமிக்க பெரிய பதவிக்கு வருவதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பமாக கிடைத்துள்ளது. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் இன்று 300 பேர்கள் இலவச கல்வி மூலம் படிக்கின்றனர். வரும் காலங்களில் 30ஆயிரமாக உயர வேண்டும்.

உப்பிட்டவரை உள்ளவரை நிணைக்கவேண்டும் கடவுள் உங்களுக்கு துணையாக இருந்து எல்லா வகையிலும் அருளாசி புரிந்து வழிநடத்துவார். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளையும் மனதார பாராட்டுகிறேன் என்றார்.

விழாவில் கூட்டுறவு துணை பதிவாளர் முத்துசாமி, பேராசிரியர் வாசுகி, நீர் வளத்துறை உதவி பொறியாளர் ஆறுமுகராஜ், வணகவரி துறை கலையரசன், கல்விதுறை சிவகுருநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக சீருடை பணியாளர்கள் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த பேச்சிகுமார் நன்றியுரையாற்றினார்.

  • Share on

தூத்துக்குடியில் அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் பிரமாண்டமான பேனர்

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும்_ தமிழக மீனவ மக்கள் கட்சி

  • Share on