தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சமையலர் பணியிடத்திற்காக நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் சார்நிலைப் பணி தொகுதி-IVயின் கீழ் வரும் சமையலர் (ஆண்/பெண்) பணியிடத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பொது விளம்பரம் மூலம் பெறப்பட்ட பணிநாடுநர்களுக்கு 04.01.2021 முதல் 08.01.2021 வரை நேர்க்காணல் நடைபெற்றது.
மேற்படி நேர்காணலின் போது மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 44 பணிநாடுநர்கள் (ஆண்கள்-35,பெண்கள்-09) தேர்வு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் செ.மு.எண்.பி4/5882/2018 நாள்: 27.11.2021 ன் படி நிர்வாக காரணங்களினால் இரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது என்ற விவரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.