• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணியில் பொங்கல் பரிசு பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்

  • Share on

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சிவுடன் மக்கள் கொண்டாடும் வகையில் தமிழக அரசின் சார்பில் நியாயவிலை கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கடையில் 21வகையான பொங்கல் பொருட்கள் மற்றும் வேஷ்டி சேலை ஆகியவற்றை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், துணைத்தலைவர் சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அம்பாசங்கர், மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய துணைச்செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணிதனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஷ்வரி, தங்கமாரிமுத்து, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் மாரிச்செல்வம், கிளைசெயலாளர்கள் காமராஜ், சிவபெருமாள், ஜோதிடர் முருகன், மற்றும் சுதாகர், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

கனிமொழி எம்பி பிறந்த நாள்: தூத்துக்குடியில் கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையலர் பணி நியமனம் ரத்து : ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on