தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாநில திமுக மகளிர் அணி செயலாளரும், மக்களவை குழு துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி பிறந்தநாள் இன்று கொண்டாப்படுகிறது..
இதனைமுன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதல் படி வடக்கு மாவட்ட மகளிர் அணி மகளிர் தொண்டரணி சார்பில் புதிய பேருந்துநிலையம் அருகில் மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
தூத்துக்குடி தமிழ் சாலை பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகில் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் பிரதீப் தலைமையில் கேக் வெட்டி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.
மாநகர திமுக துணைச்செயலாளர் கீதாமுருகேசன் தலைமையில் 300 பேருக்கு வேஷ்டி சேலை ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம், மகளிர் தொண்டரணி செயலாளர் உமாதேவி, மாநகர மகளிர் அணி செயலாளர் ஜெயக்கனி, மகளிர் அணி மாவட்ட துணைச்செயலாளர்கள் மகாலட்சுமி, தங்கம், செல்வி, மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர்கள் இந்துமதி, இந்திரா, ஜெரால்;ட் கென்னடி, மற்றும் மலையரசி, பார்வதி, தாமரைசெல்வி, அருணாதேவி, பிரமிளா, பாப்பாத்தி, கலாவதி, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், ஜான்சிராணி, கலாதேவி, அரசு வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், மாலாதேவி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், பகுதி துணைச்செயலாளர் பாலு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மதியழகன், ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம், துணைச்செயலாளர் பெருமாள், மாணவரணி துணைசெயலாளர் முத்துதுரை, தொண்டரணி துணைச்செயலாளர்கள் ராமர், சரவணன், மாநகர வர்த்தக அணி துணைச்செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, இளைஞர் அணி துணைச்செயலாளர் முத்துராமன், மீனவரணி துணைச்செயலாளர் ஆதார்மச்சாது, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சதீஷ்குமார், சுரேஷ், டென்சிங், ஹாட்லி, நாராயணன், பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, மற்றும் மகேஸ்வரசிங், வேல்பாண்டி, ஐகோட் ராஜன், பாலா, செம்புலிங்கம், சதீஷ், உலகநாதன், ஜெலஸ்டின், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதியோர் இல்லத்திற்கு உணவுகள் வழங்கப்பட்டது.