• vilasalnews@gmail.com

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் : அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் ,கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் பங்கேற்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் தலைமையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று (03.12.2020) நடைபெற்றது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலமாகத்தான் அதிக அளவு மழை அளவு கிடைக்கப் பெறும். இந்த காலக்கட்டத்தில் இயற்கையாகவே கடலில் காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகி புயல் உருவாகும். அதற்கு எடுக்கபடவேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் பேரிடர் மேலாண்மை  மூலமாக துல்லிய மாகவும் விரைவாகவும் கண்ட றிந்து புயலானது எந்த அளவுக்கு பாதிப்பை உருவாக்கும் என்று கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேரிடர் மேலாண்மை இயக்குநரகத்துக்கு நேரடியாக சென்று அங்குள்ள கட்டுபாட்டு அறையின் மூலம் அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்துள்ளார்.  வருவாய் துறை அமைச்சர்  புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.  

தமிழக அரசின் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை யின் காரணமாகதான் நிவர் புயலால் ஒரு சதவித பாதிப்பு கூட ஏற்படாத வகையில் வரலாற்றிலே ஒரு சிறப்பான நிலையை மாண்புமிகு அம்மாவின் அரசு உருவாக்கி காட்டியுள்ளது. நேற்றைய தினம் கூட மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நிவர் புயலை கையாண்ட விதத்தை தமிழக அரசையும், முதலமை ச்சரையும் பாராட்டியுள்ளார்.

இன்று காலை புரெவி புயல் திறிகோணமலையை கடந்து பாம்பன் அருகே மையம் கொண்டு ள்ளதாக தகவல் கிடைக்க பெற்று ள்ளது. இது தென் மாவட்ட ங்களை அதிக பாதிப்பை ஏற்படு த்தும் என்ற சூழ்நிலையில் கூட  தேவை யான அனைத்து முன்னெச்சரி க்கை நடவடிக்கை களும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. குறி ப்பாக தென் மாவட்டங்களில்  சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நியமித்து அவர்கள் மூலமான தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. காவல் துறை உயர் அதிகாரிகளை நிர்ணயித்து அவர்கள் மேற்பார்வையில் செய்யபட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக கேட்டறிந்து வருகிறார். அந்த வகையிலே மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புயல் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான ஆய்வு செய்ய வருகை தந்துள்ளார்.

நேற்றைய தினம் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட கூடிய 36 பகுதிகள் கண்டறிந்து அந்த பகுதிக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளது. அனைத்து துறை களையும் ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் 100 சதவிதம் கரைக்கு திரும்பி உள்ளனர். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான புயல் நிவாரணம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.   

இந்த நிலையிலே, நமது மாவட்டத்திலே மானாவாரி பயிர்கள் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் பயர் வகை பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. புயலினால் அதிக மழை பொலிந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானால் அந்த இழப்பில் இருந்து மீட்க 100 சதவித விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் இந்த பயிர் காப்பீடு மேற்கொள்ளபட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து பயன் பெறும் நிலையை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்தார்.

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: 

ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் எதிர்கொள்கிற வடகிழக்கு பருவ மழை போது கடலிலிலே உருவா கின்ற புயலை எதிர் கொண்டு மக்களை பாதுகாக்கின்ற மகத் தான நடவடிக்கைகளை தமிழ் நாட்டின் சாதனை முதலமைச்சர் அவர்கள் நீர் மேலாண்மை யிலே இந்திய அரசின் பாராட்டுக் களை பெற்றுள்ளார்கள். மாண்பு மிகு முதலமைச்சர் அவர்கள் இன்றை க்கு இயற்கையை இடர்பா டுகளை கையால்வதில் புதிய இலக்கணத் தை இந்தியாவுக்கே முன்மாதிரி யாக உருவாக்கி தந்துள்ளார்கள்.

கடந்து சென்றிருக்குன்ற நிவர் புயலிலே உயிர், பொருள் சேதம் இல்லாமல் மக்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைக்கு நேற்றைய தினம் இந்த புரவி புயல் நிலவரம் குறித்து மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் தொலைபேசியிலே கேட்டு அறியும்போழுது நிவர் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் பாதுகாப்பாக கையாண்ட விதம் குறித்தும் பாராட்டுகளையும் வாழ்த்துக் களையும் தெரிவித்தார்கள்.

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட இடங்கள் பாதிக்கபடக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக நமது தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கூறியதுபோல 36 இடங்கள் பாதிக்கபடக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து கடலோர பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள மக்களை எல்லாம் பாதுகாப்பாக நிவாரண முகாம் களில் தங்க வைப்பது தொடர்பாக மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் ஆய்வு மேற்கொண் டார்கள். இந்த ஆய்வில் முதன்மை செயலாளர், கருவூல கணக்குத் துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்து துறை முக்கிய அலுவலர்களும் பங்குபெற்றார்கள். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பாகவே 100 சதவிதம் கரை திரும்பிய நிலையை உறுதி செய்துள்ளார்கள். அனைத்து படகுகளும் கரை திரும்பியிருக்கிறது. ஆழ்கடல் மீன் பிடிக்க சென்றவர்களும் கரை திரும்பிவிட்டார்கள் என்று தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வழிகாட்டுதலோடும், முன்னாள் அமைச்சர் அவர்களும் வழிகாட்டுதலோடும் மாவட்ட ஆட்சியர்; இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாநகராட்சி ஆணையர் அவர்களும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களும், கூடுதல் ஆட்சியர், சார் ஆட்சியர், திட்ட இயக்குநர் மற்றும் அனைத்து அலுவலர்களும் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகள், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளின் தற்போதைய நிலை குறித்தும் 100 சதவித நிறைந்த நீர் நிலைகளில் உள்ள உபரி நீரை வெளியேற்றுவதை எப்படி கையால்வது என்பது குறித்தும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அறிவு ரைகள் வழங்கி உள்ளார்கள். 

நேற்று மாலை இலங்கையில் புரெவி புயல் கரையை கடந்து அதன் தாக்கத்தில் அடிப்படையில் 17 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 7605 ஏரிகள் உள்ளன.

இந்த ஏரிகளில் அதிக அளவு மழைப்பொழிவு காரணத்தால் 100 சதவித எட்டும் நிலையில் உள்ள ஏரிகளை தனி கவனம் செலுத்தியும், குறிப்பாக 979 ஏரிகள் 100 சதவிதம் கொள்ளவை எட்டியுள்ளது. அந்த ஏரிகள் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

தென்மேற்கு வங்க கடலிலே உருவான இந்த புரெவி புயலானது மேற்கு மற்றும் வடக்கு திசையை நோக்கி கடந்த 6 மணி நேரத்திலே மணிக்கு 12 கி.மி. வேகத்திலே அது நகர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது பாம்பன் கிழக்கு மற்றும் தென் கிழக்காக காலையிலே 8.30 மணி நேர நிலவரப்படி 180 கி.மி. தொலைவில் இருந்தது. வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த தகவலானது இந்த புயலின் காற்று வீசக்கூடிய வேகமானது 70 முதல் 90 கி.மி. வெகத்தில் காற்று வீச கூடும் என்று கூறியுள்ளனர். 

இதன்காரணமாக முன்னெச்சரிக் கை நடவடிக்கையாக விளம்பர பலகை அகற்றவும், பட்டு போன மரங்களை அகற்றவும் உடனடியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம்  மேற்கொண்டு வருகின்றார்கள். இன்று இரவு 4ம் தேதி அதிகாலை அது காற்றின் வேகம் 70 கி.மி முதல் 90 கி.மி. வரை வீசும். புயல் கடந்து செல்லும் என்ற அடிப்படையிலே கன மழை பெய்தாலும் சரி, தொடர் பெய்தாலும் சரி, அதித காற்று வீசினாலும் சரி, உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படக்கூடாது என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையை, உத்தரவை செயல்படுத்துவதக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மாண்புமிகு செய்தி மற்றம் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலே மாவட்ட நிர்வாகம்; தயார் நிலையில் உள்ளார்கள். மாநகராட்சி பகுதியில் நீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதைபோன்று ஏரிகளில் உபரி நீரை உரிய பாதுகாப்போடு வெளியேற்றவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. மேலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் இராமநாத புரம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலே 490 நிவாரண முகாம்களில் சுமார் 1,92,000 நபர்கள் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 20 நிவாரண மையங்கள்  தயார் நிலையில் உள்ளன. தற்போது 2 முகாம்களில் 150 நபர்கள் நேற்று மாலை முதல் தங்க வைக்கபட்டுள்ளனர். தேவையான உணவுகள் வழஙக்பட்டு வருகிறது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை நிவாரண முகாம்களுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. 

மக்களுக்கு அரசின் வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் இருக்கும் இடம் பாதுகாப்பனாதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு சதவிதம் சந்தேகம் ஏற்பட்டாலும்கூட அரசு ஏற்பாடு செய்துள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையங்களுக்கு உடனடியாக சென்றுவிட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்து ள்ளார்கள். மேலும் புயல் காலங் களில் தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் என்ற வேண்டுகோளும் வைத்து ள்ளார்கள். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 100 சதவிதம் பாதுகா ப்பாக இந்த நாம் இந்த புயலை எதிர்கொள்ள வேண்டும். நீர் நிலைகளுக்கு அருகிலே செல்வதை தவிர்க்கவும், செல்பி எடுக்க வேண்டாம் இதுபோன்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோள். இதை மக்கள் கடைபிடித்து உரிய பாதுகாப்பாக புயலை எதிர்கொள்ள வேண்டும். பேரிடர் காலத்தில் ஊடகத்தின் பங்களிப்பு மகத்தானது.

ஏனென்றால் நிமிடத்து நிமிடம் புயல் செய்திகளை மக்களுக்கு சென்று சேர்கிறிர்கள். இது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. சமுக வலைதளங் களில் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு மக்களை அச்சத்தை ஏற்படுத்தும்போது உங்களை போன்ற ஆதாரபூர்வமான செய்திகள் மக்களிடம் உள்ள அச்சத்தை போக்கிறது. எனவே ஊடகங்கள் இந்த புயல் எச்சரிக்கையில் முக்கிய பங்காற்றுகின்றனர். எனவே ஊடகத்தின் பங்களிப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.  


முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட தலா ரூ.20 லட்சம் மதிப்பிலான மூன்று 108 ஆம்புலன்ஸ்களை மாண்புமிகு வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் ஓட்டுநர்களிடம் சாவிகளை வழங்கி பணிகளை துவக்கி வைத்தார்கள். இந்த வாகனங்கள் காயல்பட்டிணம் அரசு மருத்துவமனை, எப்போதும்வென்றான் மற்றும் தென்திருப்பேறை ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்பட்டு சேவையாற்ற உள்ளது. 

தொடர்ந்து நபார்டு வங்கி நிதியுதவி ரூ.15 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பண பரிவர்த்தனை மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தின் சாவியை  வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்  வழங்கினார்கள்.

ஆய்வு கூட்டத்தில் முதன்மை செயலாளர் கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜயந்த், சாரங்கன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார்,  மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்,  கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், கூட்டுறவு இணை பதிவாளர் ரவிசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சிவகாமி, 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுனில், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

டிச.5-ல் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - சண்முகநாதன் எம்எல்ஏ அறிக்கை

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - ஆட்சியர் வேண்டுகோள்

  • Share on