• vilasalnews@gmail.com

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா : முத்தையாபுரம் மாட்டுவண்டிப் பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன!

  • Share on

தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில், காளைகள் சீறிப்பாய்ந்தன.

இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துரை தொண்டர்படை சார்பில் தூத்துக்குடி அருகே முத்தையாபுரம்- துறைமுகச் சாலையில் இன்று ஜனவரி 5ம் தேதி மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டிகளை திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி, திமுக மாநகரசெயலாளர் ஆனந்த சேகர், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன்,  மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.

பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டு வண்டி என 2 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம்,மதுரை, திண்டுக்கல்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டிப் போட்டிக்கு 10 மைல் தொலைவும், சிறிய மாட்டுவண்டிப் போட்டிக்கு 6 மைல் தொலைவும் சென்று திரும்பும் வகையில் பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 9 ஜோடி காளைகளும், சிறிய மாட்டுவண்டி பந்தையத்தில் 22 ஜோடி காளைகளும் பங்கேற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளைக் காண்பதற்காகச் சாலையில் இருபக்கங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். ஏற்பாடுகளை ஊமைத்துரை தொண்டர்படை நிர்வாகிகள் சரவணன், சதிஷ்குமார், செந்தில்குமார், சுப்புராஜ், சுரேஷ், சுதன்,மயில்முருகன், அரசு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்தநாள் விழா - மாலை அணிவித்து மரியாதை !

கனிமொழி எம்பி பிறந்த நாள்: தூத்துக்குடியில் கோலாகலம்

  • Share on