தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்தியா சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாநகரில் உள்ள கட்டபொம்மன் நகரில் வைத்து நடைபெற்றது. விழாவில் கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில், திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக பிரையன்ட் நகர் பகுதி செயலாளருமான ராமகிருஷ்ணன், மற்றும் திமுகவைச் சேர்ந்த 45-வது வட்ட செயலாளர் சுரேஷ், வட்ட செயலாளர் மூக்கையா, வட்ட பிரதிநிதி சுப்பையா,45-வது வட்ட அவைத்தலைவர் கோபால் ராமன்,44-வது வட்ட செயலாளர் எஸ்.பி.சாரதி, 45-வது வட்ட பிரதிநிதி சிவசுப்பிரமணியன், 45-வது வட்ட பிரதிநிதி சரவணன், மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கர், 45-வது மதிமுக வட்ட பிரதிநிதி பேச்சிராஜ், மதிமுக முன்னாள் மாணவரனி அமைப்பாளர் எம்.எஸ்.குமார், அழகர் ஜூவல்லர்ஸ் ஜெயராமன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை தலைவர் ஜெகவீரராஜ், செயலாளர் விக்னேஷ், பொருளாளர் முருகன், ஆகியோர் செய்து இருந்தனர்.