ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ. 5.81 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நண்பர்கள் ஒன்று கூடி மது விருந்துடன் புத்தாண்டை வரவேற்பர். இதனால் புத்தாண்டிற்கு முந்தைய நாள் மற்றும் புத்தாண்டு தினத்தில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.
இதனை அடுத்து டிசம்பர் 31ம் தேதி சுமார் 2 கோடியே 69 லட்சமும், ஜனவரி 1 ம் தேதி சுமார் 3 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன என டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.