• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மேல்மருவத்தூர் சக்திபீடத்தில் ஒமைக்ரான் தொற்று நீங்க 5832 மந்திரங்கள் படித்து பெண்கள் அர்ச்சனை!

  • Share on

தூத்துக்குடி திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மக்களை காக்க‌ 5832 மந்திரங்கள் படித்து பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். 

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன், தூத்துக்குடி திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மக்களை காக்க‌ 5832 குரு போற்றி மந்திரங்கள் படித்து பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற சிறப்பு பூஜையை வேள்விக்குழு இணைச்செயலாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார்.  

இதனைத்தொடர்ந்து விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்வளம் சிறக்கவும், கல்வி அறிவு மேலோங்கவும் வேண்டி சங்கல்பம் செய்து கருவறை அன்னைக்கு 1008 மந்திரங்கள் படித்து ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சக்திபத்மா தொடங்கி வைத்தார்.  

விழாவில், ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன், பொருளாளர் கண்னன், இளைஞர் அணி செயலாள‌ர் செல்லத்துரை, சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா,மகளிர் அணி செல்வி, இளைஞர் அணி பாலசுப்ரமணியன், வேள்விக்குழு கனகா, முடிவைத்தானேந்தல் பொறுப்பாளர் முத்து உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மாதாந்திர கூட்டம்!

புத்தாண்டு தினக் கொண்டாட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த மது விற்பனை ரூ : 5.81 கோடி!

  • Share on