தூத்துக்குடியில் கூட்டுறவு பண்டகசாலை மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மாதாந்திர கூட்டம் வஉசி சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, கூட்டுறவு சங்க தலைவர் எட்வின் பாண்டியன் தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் இளமாறன், துணை தலைவர் கல்யாணசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முத்துலட்சுமி தீர்மானங்களை வாசித்தார்.
தொடர்ந்து சென்னை கூட்டுறவு பதிவாளர் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் கணினி முறையில் அலுவலத்தை செயல்படுத்திட புதிய கணினி மையம் அமைக்க வேண்டும்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்ட நலத்துறை, சார்பில் நடத்தப்படும் மாணவர்கள் விடுதிகள் மற்றும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அன்னதான திட்டத்திற்கும் தேவையான தரமான உணவுப் பொருட்கள் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சார்பில் வழங்கப்பட்டு வந்தது தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.
அதனால் மாவட்ட நிர்வாகம் மீண்டும் ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்ட துறை, மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இல்லத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை மாவட்ட கூட்டுறவு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் வாங்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட 11 முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்தில், நிர்வாககுழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், தாசன், சசிகுமார், பரதேசி, பொன்முருகன், விஜிலியா, புஷ்பராணி, விஜயா, ஜாக்குலின், ஈஸ்வரி, ஜானகி, சுப்புலட்சுமி, கார்த்தீசன், கலைச்செல்வி, டெல்சி. உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்