• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் திமுகவில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்து கொண்ட மாணவரணி நிர்வாகி

  • Share on
தூத்துக்குடி தெற்கு மாவட்ட  திமுகவை சேர்ந்தவர் அதிமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராக இருப்பவர் உடன்குடியைச் சேர்ந்த அமிர்தா எஸ்‌.மகேந்திரன். இவர் இன்று (02.01.2022) காலை திமுகவில் இருந்து விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை அவரது சொந்த ஊரான பண்டாரவிளையில் சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி  தன்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

உடன், ஒன்றிய கழக செயலாளர்கள் தாமோதரன், காசிராஜன், ராஜ்நாராயணன், பேரூராட்சி கழக செயலாளர்கள் செந்தமிழ் சேகர், குமரகுருபரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொன் பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் குணசேகரன்,முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர்கள் குலசை சங்கரலிங்கம், சரவணவேல், உடன்குடி சாரதி, ரகுமதுல்லா, கிளைச் செயலாளர் பால்துரை, ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டான்லி, மற்றும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பண்டாரவிளை பாஸ்கர், பால்த்துரை, பெருமாள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளைஞர்கள்

கோவில்பட்டியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  • Share on