• vilasalnews@gmail.com

புதுக்கோட்டை அருகே சாலையில் திரிந்த கால்நடையால் விபத்து: வாலிபர் பலி!

  • Share on

புதுக்கோட்டை அருகே சாலையில் திரிந்த கால்நடையால் ஏற்பட்ட பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை, ஐப்பன் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் அருள்முருகன்(27). தும்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு  பைக்கில் புதுக்கோட்டையிலிருந்து கூட்டாம்புளி சாலையில், பால் பண்ணை அருகே சென்ற போது சாலையில் குறுக்கே பாய்ந்த மாடுகள் மீது அருள் முருகன் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அதே நேரத்தில் கூட்டாம்புளியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் அருள்முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. 

இந்த விபத்தில் அருள்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகிறார்கள். இப்பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே சிறுமியுடன் வாலிபர் தற்கொலை முயற்சி!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளைஞர்கள்

  • Share on