தான் காதலித்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுத்ததால் சிறுமி, காதலன் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் அருகே செவல்குளம் காலனி தெருவைச் சேர்ந்த தெய்வ பாண்டியன் மகன் வேல்முருகன்( 22) ஜேசிபி ஆப்பரேட்டர். வேல்முருகனுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அச்சிறுமியை திருமணம் செய்ய வேல்முருகன் அச் சிறுமியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்து வேல்முருகனும் அச்சிறுமியும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
இதனையடுத்து, இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிறுமியின் தாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மாரியம்மாள், வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.