• vilasalnews@gmail.com

டிச.5-ல் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - சண்முகநாதன் எம்எல்ஏ அறிக்கை

  • Share on

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வருகிற 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது என சண்முகநாதன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் :

மறைந்த தமிழக முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் வருகிற 05.12.2020 (சனிக்கிழமை) அன்று அனுசரிக்கப்படுகிறது. 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெருவில் அலங்கரிக்கப்பட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

இந்நிகழ்வில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள்,கழக தொண்டர்கள், மகளிர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி, வட்ட, கிளைக் கழகங்களில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவ படத்தினை அலங்கரித்து, அஞ்சலி செலுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி - கோவை, சென்னை லிங்க் எக்ஸ்பிரஸ் இரயில்களை மீண்டும் இயக்கிட கீதா ஜீவன் எம்எல்ஏ வலியுறுத்தல்

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் : அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் ,கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் பங்கேற்பு!

  • Share on