• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : கட்டபொம்மன் நகரில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பஜனை பாடலுடன் வழிபாடு!

  • Share on

மார்கழி மாத பிறப்பையொட்டி தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள *"ஸ்ரீ வரத விநாயகர்"* கோவிலில் அதிகாலையில் பஜனை பாடல்களுடன் வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில்,  சனிக்கிழமையான இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரத விநாயகர் பஜனை குழுவைச் சேர்ந்த பக்தர்கள் மார்கழி மாத பக்தி பாடல்களை பாடியவாறு தெருவை சுற்றி உலா  வந்து, கடவுளின் நாமங்களைச் சொல்லி சிறப்பு பஜனை பாடப்பட்டது. அதனையடுத்து, கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பொதுமக்கள், பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள்,பெண்கள், சிறுவர் சிறுமியர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டு பஜனை பாடல் பாடி  இறைவழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

  • Share on

திருச்செந்தூர் கடற்கரைக்கு செல்ல தடை : வெறிச்சோடியது கடற்கரை!

ஓட்டப்பிடாரம் அருகே சிறுமியுடன் வாலிபர் தற்கொலை முயற்சி!

  • Share on