• vilasalnews@gmail.com

பறையர் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி தேர்தல் ஆலோசணை கூட்டம்!

  • Share on

மாநகராட்சி தேர்தல் குறித்த அவசர ஆலோசணை கூட்டம்,பறையர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் நேற்று (30-12-2021) மாலை 7 மணியளவில் எட்டையாபுரம் ரோடு ஹாங்காங் பிளாசாவில் நடைபெற்ற பறையர் சமுதாய கூட்டமைப்பின் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தல் குறித்து அவசர ஆலோசனை கூட்டத்தில் 

1. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்க வேண்டுமெனவும்.

2. இட ஒதுக்கீட்டின் விகிதாச்சாரத்தின்படி 11 மா மன்ற உறுப்பினர் வார்டுகளை ஒதுக்கவேண்டும் எனவும்.

3. தூத்துக்குடி நகராட்சியாக இருந்த போது பறையர் சமுதாயத்தை சார்ந்த கவுன்சிலர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அந்த அடிப்படையில்; அரசியல் கட்சியினர் மீண்டும் பறையர் சமுதாயத்தினருக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனவும். 

4. தூத்துக்குடி மாவட்ட அரசியல் கட்சியினர், பறையர் சமுதாயத்துக்கு சரியான முறையில் வாய்ப்பளிக்க தவறும் பட்சத்தில், மேயர் வேட்பாளராக பறையர் சமுதாயத்தவரை போட்டியிட வைப்பது என்ற தீர்மானங்கள்நிறை வேற்றப்பட்டது. உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

இக்கூட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தேசிய செயலாளர் எஸ் ஜெயசீலன், நந்தமிழர் தொழிளார் நலச் சங்கம் தாமோதரன், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனர் தலைவர் புலி.இளவரச பாண்டியன், ஆதி திராவிட மகாஜனசங்கம் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியண், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பறையர் உறவின்முறை சங்கம் தலைவர் குரு சந்திரன், பொது செயலாளர் மலைக்கள்ளன், 

மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கபில், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மாவட்ட செயலாளர்  நீலமலர் மகா.சரவணன், காங்கிரஸ் எஸ்.சி எஸ்டி பிரிவு மாநகர மாவட்ட செயலாளர் ராஜாராம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் செ.பிரசாத், மற்றும் இந்திய குடியரசு கட்சி ஆண்ரூஸ், டெல்லி சதீஸ், மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனர் தலைவர் புலி.இளவரச பாண்டியன் நன்றி கூறினார்.

  • Share on

தூத்துக்குடி பிரஸ் கிளப் பொது குழு கூட்டம் : புதிய 2022 ஆண்டு காலண்டர், டைரி உறுப்பினர்களுக்கு வழங்கல்!

100 சதவீதம் மானியத்தில் 2 லட்சம் பனை விதைகள் : மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தகவல்!

  • Share on