• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பிரஸ் கிளப் பொது குழு கூட்டம் : புதிய 2022 ஆண்டு காலண்டர், டைரி உறுப்பினர்களுக்கு வழங்கல்!

  • Share on

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் நேற்று (29-12-2021)  பொது குழு கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி பிரஸ்கிளப் பொதுக்குழு கூட்டம் நேற்று( 29-12-2021) மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கான இலவச வீட்டு மனை பட்டாவை தமிழக அரசிடம் பெறுவது உள்ளிட்டவைகள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி பிரஸ்கிளப்பால் அச்சடிக்கப்பட்ட 2022ம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரி கிளப் உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரஸ்கிளப் கௌரவ ஆலோசகர் அருண் டைரி, காலண்டரை வெளியிட செயற்குழு உறுப்பினர் அகமதுஜான் பெற்றுக்கொண்டார். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் காலண்டர் மற்றும் டைரியை பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம்,  செயலாளர் இசக்கிராஜா, பொருளாளர் செந்தில்முருகன், துணைச்செயலாளர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து, சட்ட ஆலோசகர் சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் கோபால்சாமி, அண்ணாதுரை, காதர் முகைதீன்,  பார்த்தீபசங்கர், மோகன்ராஜ், மாரிமுத்துராஜ், முரளிகணேஷ், முத்துராமன், ராஜு, கண்ணன் மற்றும் பிரஸ்கிளப் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

பறையர் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி தேர்தல் ஆலோசணை கூட்டம்!

  • Share on