• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : கீழ ரெங்கநாதபுரம் பகுதியில் குண்டும் குழியுமாக சாலை சீரமைப்பு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ ரெங்கநாதபுரம் பகுதியில் குண்டும் குழியுமாக கானப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 39வது வார்டு கீழ ரெங்கநாதபுரம் பகுதியில் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, அமைச்சரின் உத்தரவின் பேரில் திமுக பகுதி செயலாளரும், முன்னாள் மாமன்ற கொறடாவுமான சுரேஷ்குமார் ஏற்பாட்டில் உடனடியாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கு அந்த பகுதி மக்கள் நன்றி கூறி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  • Share on

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் ஆய்வு கூட்டம்!

புத்தாண்டு பம்பர் பரிசாக ரூ.10ஆயிரம் கிடைத்துள்ளது... வங்கி கணக்கு விவரத்தை சொல்லுங்க.... நூதனமுறையில் ரூ 2 ஆயிரம் மோசடி!

  • Share on